11ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்த ஆன்ட்டி : போக்சோவில் கைது!

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே 16 வயது சிறுவன் ஒருவன், அரசுப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவரது வீட்டின் அருகே, 24 வயதான வினோதினி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், இவருக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளனர். ஒரு கட்டத்தில், வினோதினிக்கு தனது பக்கத்து வீட்டு சிறுவனான 11ஆம் வகுப்பு மாணவன் மீது ஆசை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர் சிறுவனிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த டிசம்பர் மாதம் வீட்டை விட்டு வெளியூருக்கு அழைத்து சென்றுள்ளார். சிறுவன் வீட்டில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர், உடனடியாக இது குறித்து பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காணாமல் போன சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த பெரியபாளையம் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், சிறுவனின் பக்கத்து வீட்டுப் பெண், ஆசை வார்த்தை கூறி அவரை வெளியூருக்கு அழைத்துச் சென்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, போலீசார் அந்தப் பெண்ணை தேடி கண்டுப்பிடித்து அவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து சிறுவனை மீட்டனர். சிறுவனை விசாரித்ததில், வினோதினி தன்னை வேறு ஊருக்கு அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளான். இதையடுத்து, வினோதினியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவரை திருவள்ளூர் மகிலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Leave a Response