பச்சையாக பொய் சொல்கிறார் விஜய்!

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத்திற்கு நிலத்தை கையகப்படுத்துவதை எதிர்த்து பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், தண்டலம் என 13 கிராம மக்கள் கடந்த 910 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாட விஜய் திட்டமிட்டு இருந்தார். இதற்காக தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சியை நடத்த காவல்துறையினர் அனுமதி அளித்தனர். அத்துடன் சம்பந்தப்பட்ட 13 கிராம பகுதிகளை சேர்ந்த மக்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் மற்றவர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் காவல்துறை தரப்பு கூறியிருந்தது. அதேசமயம் ஒரு மணிக்குள் விஜய் மக்களை சந்தித்து விட்டு புறப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்கள். இந்த நிகழ்வுக்கு புறப்பட்ட விஜயின் சில இடையூறுகளுக்கு மத்தியில் 12:15 மணியளவில் நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்கு வந்தது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தொண்டர்களுக்கு கையசைத்து வாரு பிரச்சார வாகனத்தில் வந்த விஜய் தன்னுடைய பேச்சை தொடங்கினார். அப்போது, “உங்களை அம்பேத்கர் திடலில் சந்திக்க விரும்பினேன். ஆனால் என்னை சந்திக்க அனுமதி மறுத்து விட்டார்கள்” என்றார்.

உண்மையில் நேற்று தமிழக வெற்றிக்கழகம் பொருளாளர் வெங்கட்ரமணன் சார்பில் காவல்துறையில் அனுமதி கேட்ட கடிதத்தில், “புதிய விமான நிலையம் அமைய உள்ள ஏகனாபுரம் கிராமத்திற்கு 19.01.2025 அல்லது 20.01.2025-ந் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் திரு.விஜய் அவர்கள் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் உறுப்பினர்கள் சென்று அங்குள்ள பொதுமக்களை சந்திக்க அனுமதி கோரி டி.ஜி.பி. மிடமும், மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடமும் மனு அளித்துள்ளார். மேற்கண்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கிராம மக்களை சந்திப்பதற்கு தங்களுக்கு 20.01.2025 அன்று கீழ்கண்ட நிபந்தனைகளுடன் பரந்தூர் வீனளஸ் வெட்டிங் ரிசார்ட்டில் நிகழ்ச்சி நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
1. பரந்தூர் பசுமை விமான நிலையம் அமையவுள்ள கிராமங்களின் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். மேலும், வீனஸ் வெட்டிங் ரிசார்ட்டில் உள்ள அரங்கின் கொள்ளத்தக்க அளவுக்கு மிகாமல் மட்டுமே மக்கள் பங்கேற்க வேண்டும்.
2. சட்டம் ஒழுங்கு நலனைப் பேண காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
3. தாங்கள் பரந்தூர் வீனஸ் வெட்டிங் ரிசார்ட்டில் கிராம மக்களை சந்திக்கும் நேரம் தாங்கள் கேட்டுக்கொண்டபடி காலை 11.30 மணிமுதல் 12.30 மணிக்குள்ளாக
இருத்தல் வேண்டும்.
4. தாங்கள் மேற்குறிப்பிட்டுள்ள இடத்தில் கிராம மக்களை சந்திக்கும்போது தங்களது கட்சியினரால் அல்லது ரசிகர்களால் பொதுமக்களுக்கோ அல்லது பொதுச்சொத்திற்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். தாங்கள் கோரியுள்ளபடி, மேற்சொன்ன நிபந்தனைகளை கடைப்பிடிக்கும் சூழலில் மட்டும் இவ்வனுமதி பொருத்தமாகும் என்றும், அவ்வாறு இல்லையெனில், இவ்வனுமதி இரத்தானதாக கருதப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 11 ஆம் தேதி தவெக சார்பில் மாவட்ட நிர்வாகம் அனுமதி கேட்ட கடிதத்திலும் அம்பேத்கர் திடலில் மக்களை சந்திக்க விரும்புகிறேன் எனக் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Leave a Response