மாணவி பலாத்காரம்: பணம் கேட்டு மிரட்டல்!

திங்கள்சந்தை அருகே காரங்காடு புல்லுவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜின். இவர், கோவையில் பணியாற்றி வரும் நிலையில், இவரது குடும்பத்தினர் தற்போது பேயன்குழியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஷாஜினுக்கு பக்கத்து ஊரை சேர்ந்த கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு மாணவி பிளஸ்-1 படிக்கும் போது ஷாஜின் மாணவியிடம் பணம் கேட்டுள்ளார்.

அதற்கு மாணவி கையில் போட்டிருந்த தங்க மோதிரத்தை ஷாஜினுக்கு கழற்றி கொடுத்துள்ளார். அந்த மோதிரத்தை ஷாஜின் அடகு வைத்து பணம் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன், அந்த மோதிரம் தனக்கு வேண்டுமென அந்த மாணவி ஷாஜினிடம் கேட்டுள்ளார். அப்போது மோதிரம் வீட்டில் இருக்கிறது வா தருகிறேன் என்று கூறி மாணவியை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

வீட்டிற்கு வந்த மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து வைத்திருக்கிறார். பின்னர், அந்த வீடியோவை காட்டி மிரட்டி அந்த மாணவியிடம் தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார் ஷாஜின். அந்த வகையில், மாணவியிடம் ரூ.2 லட்சம் கேட்ட நிலையில், அவரால் பணத்தை தரமுடியவில்லை.

இதனால், ஷாஜின் மாணவி ஆடை மாற்றும் படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த மாணவி அதிர்ச்சியடைந்து தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் குளச்சல் போலீசில் புகாரளித்த நிலையில், ஷாஜின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Response