சமீபத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பாக திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் எனவும் கண்டிப்பாக இதற்காக இப்போதே திமுக தொண்டர்கள் உழைக்க வேண்டும் எனவும் கூறினார். இதே போன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் 200 வெல்வது தான் திமுகவின் இலக்கு என்று கூறி வருகிறார். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனிடம் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெல்லுமா என்ற நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் கூறியதாவது, 2026 நடைபெறும் தேர்தலில் திமுக கட்சி வலுவான கூட்டணி அமைத்தால் கண்டிப்பாக 200 இடங்களில் வெல்லும் என்றார். அதே சமயத்தில் பாஜக தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்று கூறி அவர் அப்படியே இணைந்தாலும் கண்டிப்பாக பொதுமக்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றார். மேலும் ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு திமுக கூட்டணியிடம் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் விசிக கட்சி 25 இடங்களை கேட்டு பெரும் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வலுவான கூட்டணி அமைத்தால்தான் திமுகவால் 200 தொகுதிகளில் வெல்ல முடியும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். இதன் காரணமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அவர்கள் கேட்ட 25 சீட் 2026 தேர்தலில் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.