உத்தப் ரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரகாத் குமார் கர்வார். இவரது மனைவி அக்ஷனா பிரகாத் குமாரி.
32 வயதான பிரகாத் குமார் கர்வார், தனது மனைவியுடன் சென்னை அடுத்த மதுரவாயல் பகுதியில் உள்ள வக்கீல் தோட்டம் என்னும் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
மேலும், குமார் கர்வார், குன்றத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் துணைப் பேராசிரியராக பணியாற்றி வந்தார் இந்த நிலையில், நேற்று இரவு கர்வாரின் மனைவி குமாரி, அவரது செல்போன் எண்ணுக்கு பலமுறை தொடர்பு கொண்டு உள்ளார். ஆனால் அவர் அந்த அழைப்பை எடுக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த குமாரி, அருகில் வசிக்கும் நண்பரான சோனி என்பவருக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளார். இதன் பெயரில் சோனி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார், இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வீட்டைப் பார்வையிட்டு உள்ளனர்.
அப்போது வீடு பூட்டிக் கிடந்ததால், ஜன்னல் வழியாக உள்ளே என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துள்ளனர். அப்போது குமார் கர்வார், வீட்டின் கழிவறையில் முகத்தில் பிளாஸ்டிக் கவர் சுற்றிய நிலையில் இறந்து கிடந்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளனர். பின்னர், அவரது சடலத்தை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர்.
இந்த நிலையில் பிரேதப் பரிசோதனை முடிவு வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம், வெளிநாடுகளில் அதிக உணர்ச்சிகளுக்காக முகத்தில் கவரைச் சுற்றியபடி சுய இன்பம் காணுவது போல், குமார் கர்வாரும் அதற்கு முயற்சி செய்து உள்ளார் என்றும், இதனால் மூச்சுத் திணறி அவர் இறந்துள்ளார் என்றும் பிரேதப் பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.
இருப்பினும் அவர் மாத்திரை அல்லது மருந்து வடிவில் வேறு ஏதேனும் உட்கொண்டாரா அல்லது வேறு யாராலும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, கவர் சுற்றப்பட்டு இறந்து கிடந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கல்லூரி உதவிப் பேராசிரியரின் இந்த மரணம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.