வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் சாலையின் ஓரம் கொடிய விஷம் கொண்ட கண்ணாடிவிரியன் பாம்பு ஒன்று வந்துள்ளது.
அப்போது, அந்த பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த தேவராஜ் ( 48) என்பவர் குடிபோதையில் கொடிய விஷம் கொண்ட அந்த கண்ணாடி வீரியன் பாம்பை பிடித்துக் கொண்டு சாகசம் செய்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில், அந்தப் பாம்பு அவரை கடித்துள்ளது. பிறகு வலியால் துடித்த தேவராஜை அருகில் இருந்தவர்கள் அவரை இருந்து மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி தேவராஜ் பலியானார்.
குடிபோதையில் பொதுமக்கள் முன்னிலையில் கொடிய விஷம் கொண்ட கண்ணாடி வீரியம் பாம்பைப் பிடித்து சாகசம் செய்த நபர், பாம்புக் கடித்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.