விஜய் தாக்கி பேசிய திண்டுக்கல் லியோனி!

திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக பொதுக்குழு நிகழ்ச்சியில் அந்தக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் நடிகருமான திண்டுக்கல் ஐ லியோனி கலந்து கொண்டார்.

அவர் விஜயை விமர்சித்து பேசினார். அதாவது ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் கலந்து கொள்ளும் போதும் நடிகர் விஜய் என் நெஞ்சில் குடியிருக்கும் என்று ‌ பேச ஆரம்பிப்பார். இதைத்தான் தற்போது திண்டுக்கல் லியோனி விமர்சித்துள்ளார். அவர் பேசியதாவது, நேற்று கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம்‌ 2 வருடங்களில் முதல்வர் நாற்காலியில் அமரப்போகிறேன் என்று கூறுகிறார்கள். நெஞ்சில் குடியிருக்கும் என்று கூறும் போது குடியிருப்பவர்கள் எல்லோரும் காலி ஆகி விடுவார்கள். இதற்கு காலி செய்துவிட்டு போவார்கள் என்பது மட்டும்தான் அர்த்தம். கலைஞர் ‌ என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என்று கூறிய நிலையில் அது ஆண் பெண் என இரு பாலரையும் குறிக்கும்.

ஆனால் நெஞ்சில் குடியிருக்கும் என்பது வாடகைக்கும், லீசுக்கும் அல்லது ஓசியில் தான் குடியிருப்பார்கள். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஓடிப்போய்விடுவார்கள். பணம் கொடுத்தால் மட்டும்தான் அவர்கள் இருப்பார்கள். தொடங்கிய வார்த்தையே தவறு. நேற்று கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லோரும் திராவிட கழகத்தை கைநீட்டி பேசும் அளவுக்கு ஆகிவிட்டது. கட்சி தொடங்கிய ‌2 வருடத்தில் ஆட்சியைப் பிடிப்பது என்பது சாத்தியமாகுமா.? 5 நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா? கருப்பா இருக்கீங்களா? என்று விளம்பரம் செய்வது போல அது இருக்கிறது. ரோம் கோட்டை கட்டப்பட்டது போன்று பல வருடங்களாக கட்டப்பட்டது தான் திமுக என்ற மாபெரும் இயக்கம். மேலும் இதனை அவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறினார்.

Leave a Response