கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெய்தமங்கலம் பகுதியில் லிஜின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணுக்கும் இரு வீட்டார் முன்னிலையில் டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி வண்ணாரப்பேட்டை எஸ்பி கோவில் தெருவில் இருக்கும் தேவாலயத்தில் திருமணம் நடந்தது.
மணப்பெண் பெண் இன்ஜினியராக வேலை பார்க்கிறார்.
திருமணத்திற்கு முன்னதாக கடலூரை சேர்ந்த ஒரு இளம்பெண் மணமகன் தன்னை காதலித்து திருமணம் செய்து குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றியதாக திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால் லிஜின் அந்த இளம் பெண்ணை திருமணம் செய்ததற்கான ஆவணங்கள் இல்லை. இதனால் போலீசார் அந்த பெண்ணை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் திருமணம் செய்த பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரும் அவரது உறவினர்களும் ரகசியமாக லிஜின் பற்றி விசாரித்தனர். அப்போதுதான் லிஜின் பல பெண்களை காதலித்து ஏமாற்றியது தெரியவந்தது. லிஜின் திருமணம் செய்த பெண் அவரது செல்போனை ஆய்வு செய்தார். அப்போது இன்ஸ்டாகிராம் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு லிஜின் காரைக்காலை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றி ஆறு மாத கர்ப்பமாகி உள்ளார். அந்த பெண்ணுக்கு 5 லட்ச ரூபாய் பணம் கொடுத்து லெஜின் சமாதானம் பேசி உள்ளார்.
2020ஆம் ஆண்டு தென்காசியை சேர்ந்த பெண்ணை காதலித்து உள்ளார். 2023 ஆம் ஆண்டு திருமணத்தின் போது தகராறு செய்த இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார். நான்காவதாக இன்ஜினியரை திருமணம் செய்துள்ளார். பர்ஸ்ட் நைட்டுக்காக காத்திருந்த லிஜினுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக புதுமணப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் லிஜினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.