அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா: விஜய் பேச்சுக்கு திருமாவளவன் பதிலடி!

சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு குறித்த ICONOCLAST எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது…

சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே எழுதிய நூலை விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டார்…ஏற்கனவே மும்பையில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது முறையாக சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது…

நூல் வெளியிட்டுக்கு பிறகு மேடையில் உரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன்,
“நேற்று நடைபெற்ற நூல் வெளியிட்டு விழாவிற்கு வருகை தந்த ஆனந்த் டெல்டும்டே அவர்களை நாம் அழைத்து இந்த நூலை அறிமுகம் செய்ய வேண்டும் என நினைத்தோம். திடீரென இந்த விழா ஒருங்கிணைக்கப்பட்டது. இன்று 22 கோடி மக்கள் உணர்ச்சி பூர்வமாக ஏற்றுக்கொண்டு அம்பேத்கரை பின்பற்றுகிறார்கள்.

இவ்வளவு பேர் அவரை பின்பற்றுகிறார்கள் என்றால் அவரது பங்களிப்பு எவ்வளவு இருந்திருக்கும் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் அரசியல் ரீதியாக புதிய கட்டுமானத்திற்கு அடிப்படையாக உள்ளது. அம்பேத்கரை ஒரு வணிக பொருளாக, வழிபாட்டு பொருளாக பயன்படுத்த கூடாது என ஆனந்த் பேசினார். கருத்துகளை பற்றி கவலைபடாமல் கண்மூடி தனமாக ஒருவரை
பின்பற்றவும் கூடாது.

இன்று எல்லோரும் அம்பேத்கருக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். அம்பேத்கரை இந்துத்துவா தலைவர் என்று அடையாளப்படுத்துகிறார்கள்.

தமிழ்நாட்டை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் தலித்கள் பாஜகவை ஆதரிக்க கூடிய நிலையாகிவிட்டது என மிகுந்த வலியுடன் ஆனந்த் கூறினார்.

தமிழ்நாட்டில் பாஜகவை காலூன்ற விடாமல் தடுப்பதில் விசிக பங்களிப்பு மிக சிறப்பானது. ஏன் என்றால் எது அம்பேத்கர் கருத்தியல் என்கிற புரிதல் நம்மிடம் உள்ளது.

தற்காலிக புகழ்ச்சிக்கு, தற்காலிக அதிகாரத்திற்கு அம்பேத்கர் பாதையை விட்டு நாம் விலகி விட முடியாது.

4 எம் எல் ஏ போதாது 10 வேண்டும் என்றால் 10 வந்து விட்டால் மட்டும் என்ன மாறிவிட போகிறது. 2 எம்.பி இல்லை 5 எம்.பி வந்துவிட்டால் என்ன மாறிவிட போகிறது, ஒன்றும் மாறப்போவதில்லை.

சமூக மாற்றம் ஏற்படுத்துவதற்காக தாக்கத்தை நாம் உருவாக்க வேண்டும் அது தான் முக்கியம். அம்பேத்கரின் கனவும் அதுதான்.

நமக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஆயுதம் இந்திய அரசியலமைப்பு சட்டம். அதை மட்டும் அம்பேத்கர் எழுதாமல் இருந்திருந்தால் இந்த மண்ணில் மதச்சார்பின்மை என்கிற வார்த்தையே இல்லாமல் போயிருக்கும்.

அம்பேத்கர் இல்லாமல் போயிருந்தால் இந்த நாட்டின் அரசமைப்பு சட்டத்தை ஒரு சங்கி எழுதி இருக்க கூடும்.

பெரியாரை நேரடியாக எதிரி என்று அடையாளம் காட்டுபவர்கள், அம்பேத்கரை நேரடியாக எதிரி என்று அவர்களால் அடையாளம் காட்ட முடியவில்லை.

அம்பேத்கரை மதிப்புக்கு உரியவர் என்று சொல்லும் அவர்களின் அணுகுமுறை தவறு…அம்பேத்கரை விழுங்கி செரிக்க பார்க்கிறார்கள். அம்பேத்கரை பற்றி இன்று அதிகம் பேசுபவர்கள் வலதுசாரிகள் தான்.

அம்பேத்கர் தன் கடவுள் என பிரதமர் மோடி சொல்கிறார்,மக்களும் அதை நம்பி ஏமாந்து போகிறார்கள்…

விசிக இந்தியா முழுவதும் பரவ வேண்டிய தேவை உள்ளது. தேர்தலை எல்லாம் மறந்து விடுங்கள்.இதில் வெற்றிபெற வேண்டும், அதில் வெற்றிபெற வேண்டும் என்பதை எல்லாம் விட்டுவிடுங்கள்.

அது நமது முக்கிய அஜெண்டா கிடையாது. அது நமக்கு முக்கியம் இல்லை.

இருந்தாலும் அதிலும் நாம் தெளிவாக இருக்க வேண்டும்,தேர்தல் நமக்கு இரண்டாம் தரம் தான் என்றாலும் கூட நாம் தேர்தலை சந்தித்தாக வேண்டும்,கூட்டணியில் தொடர வேண்டும் என்றால் அதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.அதற்கான சண்டை தான் தற்போது நடைபெற்று கொண்டு இருக்கிறது.

அவர்கள் விரும்புவதை போல் நான் செய்ய வேண்டும், அவர்கள் விரும்புவதை சொல்லி அதை நான் முடிவாக எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.ஏன் இன்னும் கருத்து சொல்லவில்லை, முடிவு எடுக்கவில்லை என எதிர்பார்க்கிறார்கள்.
உங்களுடை எதிர்பார்ப்புக்கு எல்லாம் எதிர்வினையாற்றவா நாங்கள் இயக்க வைத்திருக்கிறோம்.நாங்கள் எங்கள் நிலைபாட்டில் உறுதியாக தெளிவாக இருக்கிறோம். தெளிவாக இருக்கும் போது நாங்கள் எந்த பதட்டமும் அடைய வேண்டிய தேவை இல்லை. எதை எந்த நேரத்தில் எப்படி அணுக வேண்டும் என எங்களுக்கு தெரியும்.

அங்கே சென்றால் அதை அள்ளலாமா? இங்கே சென்றால் இதை அள்ளலாமா? இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமா? அய்யயோ இந்த வாய்ப்பை விட்டுவிட்டால் என்னாவது?

ஒரு தம்பி சொல்கிறார்,ராமதாஸை பின்தொடர வேண்டும் என்று,எவ்வளவு சரியான ஆலோசனை கொடுக்கிறார் பாருங்கள்…100 விழுக்காடு அம்பேத்கரை பின்பற்றக்கூடியவர்கள் நாங்கள். எங்களுக்கு எந்த பேராசையும் இல்லை.

அரசியல் அதிகாரத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்பது நம்முடைய நோக்கங்களில் ஒன்று, அந்த அதிகாரம் எதற்கு,யாருக்கு பயன்பட வேண்டும் அதன் மூலம் என்ன தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது முக்கியமானது. அந்த தெளிவு எங்களுக்கு உள்ளது. அந்த தெளிவுடன் தான் எல்லாவற்றையும் விசிக அணுகுகிறது என்பதை சொல்லவேண்டிய நிலையில் இருக்கிறோம்.

தடுமாறுகிறார் திருமாவளவன் என்கிறார்கள்,பின் வாங்குகிறார் திருமாவளவன் என்கிறார்கள்.

அவர்களுக்கு நான் இந்த பதிலை சொல்லவில்லை..நீங்கள்(தொண்டர்கள்) தடுமாறி விட கூடாது என்பதற்காக இந்த பதிலை நான் சொல்கிறேன்.
நம்மை,சமூக,பொருளாதர,அரசியல் ரீதியாக மற்றவர்கள் குறைத்து மதிப்பிடலாம் ஆனால் சுயமரியாதை, நமது கருத்தியல் நிலைப்பாட்டை யாரும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது…அதை குறைத்து மதிப்பிடும் அளவிற்கு தகுதியான ஆள் யாரும் தமிழ்நாட்டில் இல்லை.

கருத்தியலில் நாங்கள் எவ்வளவு உறுதியாக தெளிவாக இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு முறையும் சொல்ல வேண்டிய தேவை இல்லை.

எல்லோருக்குமான தலைவர் நூல் வெளியிட்டு விழாவில் நான் ஏன் பங்கேற்க முடியவில்லை என ஒரு விளக்கம் கொடுத்தேன். அது ஒரு குழப்பதிற்கான பதில்,தெளிவு அவ்வளவு தான்.

ஆனால் அம்பேத்கர் எழுதிய புத்தா குறித்த புத்தகம் அவ்வளவு எளிதல்ல. காலம் காலத்திற்கும் மக்களுக்கு வழிகாட்ட கூடிய புனித நூல் அது. ஆழ்ந்த அறிவில்லாமல் அப்படி ஒரு நூலை எழுத முடியாது.” என இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

Leave a Response