ஹலோ போலீசா! சார் என் பொண்டாட்டிய கழுத்தறுத்து கொன்ணுட்டேன்!

சென்னையில் உள்ள கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம், தாய் மூகாம்பிகை நகரில் வசித்து வருபவர் கோபால் ராஜ் (வயது 35). இதே பகுதியில் கோபாலராஜ் பழைய இரும்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் மனைவி பரமேஸ்வரி (வயது 29).

தம்பதிகளுக்கு ஒரு மகன், மகள் இருக்கின்றனர். இதனிடையே, பரமேஸ்வரியின் நடத்தையில் கோபாலுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வப்போது மதுபானம் அருந்திவிட்டு வருபவர், தகராறிலும் ஈடுபட்டு இருக்கிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு நேரத்திலும் போதையில் வீட்டிற்கு வந்தவர், மனைவி பரமேஸ்வரியிடம் தகராறு செய்துள்ளார். அச்சமயம் ஆத்திரமடைந்த கோபால்ராஜ், மனைவியின் கழுத்தை அறுத்துக்கொலை செய்தார். பின் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு விபரத்தை தெரிவித்துள்ளார்.

பின் அங்கிருந்து மணிமங்கலம் காவல் நிலையம் சென்றவர், தகவலை கூறி சரண் அடைந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், பரமேஸ்வரியின் வீட்டிற்குச் சென்று, அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கோபாலராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுக்கு முன்பு தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், பரமேஸ்வரிக்கு சிலருடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரியவருகிறது. இதனால் மனைவியின் செயல்பாடுகளை கண்டித்தும் கேட்காததால் கொலை சம்பவம் அரங்கேறி இருக்கிறது என்று கூறப்படுகிறது.

Leave a Response