ஓடும் ரயிலில் ஐந்து பெண்களை கற்பழித்து கொலை செய்த சைக்கோ கொலையாளி!

குஜராத்தில் 19 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது ராகுல் கரம்வீர் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது இந்த வாலிபர் இதுவரை குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடக மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இதுவரை 5 பேரை கொலை செய்துள்ளார். இதில் 4 பேர் பெண்கள். இந்தப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அனைத்தும் ஒரு மாதத்திற்குள் நடந்துள்ளது.

இவர் ரயிலின் மாற்றுத்திறனாளி பெட்டிகளை மட்டும் குறி வைத்து பெண்களை கற்பழித்து கொல்வார். இவர் ஓடும் ரயில்களிலும் ரயில்வே பிளாட்பார்ம்களிலும் படுத்து தூங்குவதால் காவல்துறையினருக்கு அவரை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பல மாநில காவல்துறையினர் உதவியோடு ராகுலை குஜராத் போலீசார் வலைவீசி தேடிய நிலையில் 2,100 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் இதைத் தொடர்ந்து ராகுல் பிடிபட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்த காவல்துறை அவரிடம் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

Leave a Response