சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வருபவர் பார்த்தசாரதி. இவர் ரூ 1,80,000க்கு தனது மின்சார வாகனம் ஏத்தர் வாகனத்தை வாங்கி பயன்படுத்தி வருகிறார்.
அது பழுதானதால் தனியார் ஏத்தர் விற்பனை மையத்தில் தனது இருசக்கர வாகனத்தை சரி செய்ய கொடுத்துள்ளார். முறையாக சரி செய்யாமல் வாகனத்தை திருப்பி கொடுத்துள்ளனர்.
இதனால் திரும்பச் சென்று அதே தொழில் நுட்ப கோளாறு ஏற்படுவதாக விற்பனை மையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாருக்கு முறையாக தனியார் நிறுவனம் பதில் அளிக்காத நிலையில் அதன் வாசலில் முன்பு தன்னுடைய இருசக்கர வாகனத்தை தீ வைத்துக் கொளுத்தி, நெஞ்சில் அடித்துக் கொண்டு… “யாரும் இந்த வாகனத்தை வாங்காதீர்கள்…. நான் தான் ஏமாந்து விட்டேன்” எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் தனியார் நிறுவனம் பார்த்தசாரதி இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்