கடந்த சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக பாமகவினர் (MBC) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் உள்ள 20 சதவீத இட ஒதுக்கீட்டில் இருந்து வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு பெற போராட்டம் நடத்தி 10.5 உள் ஒதுக்கீடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கி இருந்தார். இந்த உள் ஒதுக்கீடு திமுக ஆட்சிக்கு வந்த உடன் ரத்து செய்தது.
இதனை எதிர்த்து பாமகவினர் போராட்டம் நடத்தினார்கள். இது ஒரு புறம் இருக்க தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கீடு செய்ய பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார். அதற்கு மத்திய அரசாங்கம் தான் சாதிய மக்கள் தொகை கணக்கீடு நடத்த முடியும் என பதில் தெரிவித்து இருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
இந்த நிலையில் வன்னியர்களின் ஆதரவு பெறுவதற்காகவும் இடஒதுக்கீடு கோரிக்கையை திசை மாற்றுவதற்காகவே தற்போது இட ஒதுக்கீடு போராட்ட 21 தியாகிகள் நினைவு மண்டபம் கட்டுவதாக பாமகவினர் எதிர்ப்பு
தெரிவித்து வந்தார்கள். மேலும் இந்த மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு ராமதாஸ்க்கு அழைப்பு விடுத்து இருந்தார்.
இந்த நிலையில் தான் அதானி விவகாரத்தில் ராமதாஸ் வெளியிட்டு இருந்த அறிக்கைக்கு பதிலாக “வேலை இல்லாமல் அறிக்கை வெளியிடுகிறார் “என முதல்வர் தெரிவித்து இருந்தார். முதல்வரின் இந்த பதிலுக்கு எதிராக “ராமதாஸிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என பாமகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 21 தியாகிகள் நினைவாக விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் தமிழக அரசு சார்பாக கட்டப்பட்டு வருகிறது. மணிமண்டப திறப்புக்கு ராமதாஸ்க்கு அழைப்பு விடுத்து இருந்து திமுக தற்போது உள்ள அரசியல் சூழல் மணி மண்டபம் திறப்புக்கு பாமகவினர் வருகை புரிய மாட்டார்கள் என தெரிய வந்துள்ளது.