சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வசிக்கும் ஜோதி(60) என்பவருக்கும் வில்லிவாக்கத்தில் வசிக்கும் சசிகலா என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது.
இதில் சசிகலா என்பவர் உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சசிகலாவின் 2வது மகள் ரம்யா(27) தனது கணவனைப் பிரிந்து தாய் வீட்டுக்கு வந்து தங்கி உள்ளார். அப்போது அவருக்கு ஜோதிவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ரம்யாவும், ஜோதியும் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். ரம்யாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அதனால் இவர்கள் 6 பீர் பாட்டில்களை வாங்கி வந்துள்ளனர்.
இதில் ரம்யா இரவில் 4 பீர் பாட்டில் குடித்துள்ளார். அதன் பின் இருவரும் உறங்க சென்றனர். நள்ளிரவில் திடீரென ரம்யாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதன் பின் மீண்டும் எழுந்து மீதம் இருந்த 2 பாட்டிலை ரம்யா குடித்துள்ளார். இதனால் அவருக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜோதி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரம்யா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் ரம்யா இருந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.