விஜய் கருவாட்டு சாம்பார் பண்றார்னா..? சீமான் கருவாட்டு சாம்பார் பண்ணலையா..??

தமிழக வெற்றி கழகம் என்கின்ற கட்சியை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் தொடர்ந்து தனது கட்சி, கொடி என அனைத்தையும் அறிமுகம் செய்தார். அதிலும் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் மிக பிரம்மாண்டமாக நடத்தி முடித்து இருந்தார்.

இதில் நடிகர் விஜயின் பேச்சுக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். அதிலும் இந்த மாநாட்டில் நடிகர் விஜய் ஆளும் திமுக கட்சியினை நேரடியாக தாக்கி பேசி இருந்தார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதுமட்டுமில்லாமல் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மாநாட்டிற்கு முன்பு வரை தனது தம்பி என்று கூறி வந்தவர். மாநாட்டிற்கு பிறகு விஜயின் கொள்கையையும் அவரையும் தாறுமாறாக விமர்சித்து பேசியிருந்தார்.

அதிலும் கூமுட்டை, லாரி அடிபட்டு செத்துப் போவாய் என தகாத வார்த்தைகளால் அவர் பேசியிருந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தொடர்ந்து கேப் கிடைக்கும் போதெல்லாம் விஜய் குறித்தும், அவரின் கொள்கையை குறித்தும் பேசி வருகின்றார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று என நடிகர் விஜய் சொல்வது எங்கள் கொள்கைக்கு நேர் எதிரானது.

திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறானது. மணியரசன் சொல்வது போல ஒன்று சாம்பார் என சொல்ல வேண்டும். இல்லையென்றால் கருவாட்டு குழம்பு என்று சொல்ல வேண்டும். கருவாட்டு சாம்பார் என்று சொல்லக்கூடாது என்று பேசியிருந்தார். இதற்கு ப்ளூ முழு சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.

அதில் அன்று விஜயை பார்த்து ஒன்று ரோட்டுக்கு அந்த பக்கம் நில்லு, இல்லன்னா இந்த பக்கம் நில்லு, நடுவுல நிக்காத.. திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள் என்று சொல்லாத என்றார் சீமான். ஆனால் இன்று தமிழ் தேசிய உணர்வு கொண்ட இவர் தீவிர வலதுசாரி சிந்தனை கொண்ட வேட்டையன் நடிகரை மணிக்கணக்கில் சந்திப்பதும், சங்கி என்றால் நண்பன் என்பதும் சரியா?

இப்போது இவர் மட்டும் ரோட்டின் நடுவில் தானே நிற்கிறார். கருவாடு என்று சொல்லு, இல்ல சாம்பாருன்னு சொல்லு எதுக்கு கருவாட்டு சாம்பார்னு சொல்ற என விஜயை கேள்வி கேட்டவரும் இவர்தானே? அப்படி என்றால் தற்போது இவர் சமைக்க ஆரம்பித்து இருப்பதும் கருவாடு சாம்பார் தானே? என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு ஆதரவாக பேசியிருக்கின்றார். இது விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

Leave a Response