பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தவெக தலைவர் விஜய், பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பெண்கள் பாதுகாப்பில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் நேற்று ட்விட்டர்ல் கருத்து தெரிவித்தார்.
அதில் அவர் “சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ள விஜய், பெண்களின் பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது என தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளர்.
மேலும் பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக குறிப்பிட்டு, அதனை தடுக்க ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுகவை நேரடியாக விமர்சித்துள்ளார். மேலும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு, அரசு தனி இணையத்தளத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற யோசனையை குறிப்பிட்டு அதனை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்திஇருந்தார் தவெக தலைவர் விஜய்.
கிட்டத்தட்ட விஜய் கூறிய இதே கருத்தையே திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார் எனக் கூறப்படுகிறது.
ஆனால் அதில் ஒரு சின்ன திருத்தமாக ஆளும் மாநில அரசின் மீதா விமர்சனம் தவிர்த்து அவர் பதிவிடுகையில், பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால், ஒருபோதும் விடுதலை அடைய முடியாது. ஆண்களுக்கு நிகராய் பெண்கள் அனைத்து விதத்திலும் உயர்ந்துள்ளனர்.
ஆனாலும், வீடு தொடங்கி வீதி வரை சமூகத்தின் எல்லா தளங்களிலும் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது என பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து நேரடியாக தனது ஆதங்கத்தை பதிவிவிட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க வேண்டும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியேற்போம் என பொதுவான அறிவுறுத்தலை மட்டும் பதிவிட்டுள்ளார் திமுக எம்பி கனிமொழி.
பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதில் கூட தன் கட்சியை விட்டுக் கொடுக்க மாட்டாரா கனிமொழி என்று விஜய் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.