உட்கட்சி பூசல்களால் ஆட்டம் காணும் திமுக!

சில தினங்களுக்கு முன்பு திருச்செந்தூர் தெய்வானை என்று பெயர் கொண்ட யானையானது தனது இரு பாகன்களையும் தாக்கியதால் அந்த இடத்திலேயே மரித்தர்கள். இது குறித்து வனத்துறை அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டி பேசியிருந்தார்.

அதில், முறையாக எந்த ஒரு கோவில் யானைக்கும் பயிற்சி அளிப்பதில்லை பராமரிப்பும் செய்வதில்லை என குறை கூறியிருந்தார். மேலும் பீகாரிலிருந்து வரவழைக்கப்பட்டது தான் தெய்வானை, தற்பொழுது வரை அதற்கு எந்த ஒரு வனத்துறை சார்ந்த தகுதி சான்றிதழ்களும் வழங்கப்படவில்லை என கூறினார்.

ஐயப்பன் சீசன் என்பதால் தமிழகத்திலிருந்து செல்லும் பக்தர்களுக்கு பயன்படும் வகையில் ஐந்து லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை தொடங்கி வைத்தவுடன் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வனத்துறை அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியது குறித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது, அமைச்சர் பொன்முடி கூறியதை குற்றம் குறையாக எடுக்கக் கூடாது. ஏதேனும் குறை இருக்கும் என்றால் அதனை மாற்றிக் கொள்ள வேண்டும். அதேபோல தற்போது தெய்வானை மிகவும் நன்றாக உள்ளது. உயிரிழந்த யானை பாகனை சேர்ந்த குடும்ப உறுப்பினருக்கு தகுதியின் அடிப்படையில் திருச்செந்தூரில் வேலை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்று கூறினார்.

மேலும் இதுமட்டுமில்லாமல் அமைச்சர் பொன்முடி குறை சொல்லியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியும் உள்ளார். அதாவது, கிட்டத்தட்ட 27 கோவில்களுக்கு 28 யானைகள் உள்ளது. அனைத்து யானைக்கும் தினசரி நடைப்பயிற்சி என தொடங்கி மருத்துவ பரிசோதனை வரை சீராக நடைபெற்று தான் வருகிறது. மேலும் எந்தெந்த கோவில்களில் உள்ள யானைகளுக்கு வனத்துறையில் முறையான அனுமதி கிடைக்காமல் உள்ளதோ அதனை எல்லாம் சரி பார்க்க சொல்லி உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் மீனாட்சி அம்மன் சன்னதியில் உள்ள யானையை காப்பாற்ற டென்மார்க்கில் உள்ள மருத்துவரை அழைத்து வந்து சிகிச்சை கொடுத்தோம் என பதிலடி கொடுத்துள்ளார். இதன் மூலம் திமுக அமைச்சர்களிடையே உட்கட்சி மோதல் இருப்பது அப்பட்டமாக தெரிய வந்திருக்கிறது.

Leave a Response