தவெக முதல் மாநில மாநாட்டில் நடிகர் விஜய் பேசும்பொழுது திமுக கட்சியே தங்களுக்கு முதல் எதிரி என்று உரக்க கூறியிருந்தார். இது சம்பந்தமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் பத்திரிக்கையாளர்கள் பலமுறை கேள்வி எழுப்பியும் அவர் எந்த ஒரு கேள்விக்கும் பதில் தராமல் மலுப்பி இருந்தார். ஆனால் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் தவெக கட்சியை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.
திருவெண்ணெய்நல்லூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “எந்த திசையில் இருந்து யார் வந்தாலும் திமுகவுக்கே வெற்றி கிடைக்கும். டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, லோக்கலில் இருந்து வந்தாலும் சரி திமுகவுக்கு தான் வெற்றி.2026ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணி அமைத்தாலும் நமக்கு தான வெற்றி” என்று விஜய்யை விமர்சித்து பேசினார்.