வாகை என்கிற புதிய சேனலை ஆரம்பிக்கப் போகிறார் த வெ க தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ள விஜய் தனது முதல் மாநாட்டை நடத்தி இந்தியாவை திரும்ப பார்க்க வைத்துள்ளார்.

மாநாடு நடந்த நாள் முதல், மற்ற கட்சிகள் கண்ணீர் விடாத குறை தான். தொடர்ந்து விமர்சிக்க ஒன்றும் கிடைக்காததால், பாசிசம் என்ற ஒரு வார்த்தையை நன்றாக கெட்டியாக பிடித்துவிட்டார்கள்.

ஒரு பக்கம் நியாயமாக விமர்சிக்கும் கட்சிகளும் உள்ளன. மறுபக்கம் போற போக்கில் எதையாவது உளறி கொண்டு போகும் கட்சிகளும் உள்ளன. இதில் திமுக தலைமை மிகவும் உஷாராக உள்ளது. விமர்சித்து விஜயை பெரிய ஆளாக ஆக்கிவிட கூடாது என்பதில் உறுதியாக இருக்கும், அதே வேளையில், இளைஞர்களை ஈர்க்க என்ன செய்வது என்றும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இப்படி இருக்க, சீமான் அந்தர் பல்டி அடித்து, விஜயை மிகவும் மோசமாக விமர்சித்து வருகிறார். ஆனால் விஜயோ, ‘அவரை ஒரு ஆளாக மதித்து, பதிலடி கொடுத்து, பெரிய ஆள் ஆக்கி விடாதீர்கள்’ என்று தன்னுடைய தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மறைமுகமாக கூறியுள்ளார். எப்படி என்றால், ‘அவர்கள் விமர்சிக்கிறார்கள் என்பதற்க்காக, பதிலடி எதுவும் கொடுக்க வேண்டாம். தரக்குறைவாக அவரை பேச வேண்டாம்’ என்று அறிவுறுத்தியுள்ளார்.

சூழ்நிலை இப்படி இருக்க, புதியதாக விஜய் டிவி சேனல் ஒன்றை துவங்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. முழு அரசியல்வாதியாக மாறி இருக்கும் விஜய், முதல் முறையாக டிவி சேனலை ஆரம்பித்து, தன்னுடைய கொள்கைகளையும் கோட்பாடுகளையும், மக்களிடம் கொண்டு போயி சேர்க்கும் முடிவில் இருக்கிறாராம்.

இதற்காக அவர் புதிய விண்ணப்பத்தை கொடுத்து, அதற்காக காத்திருந்து, அனுமதி கிடைக்குமா கிடைக்காதா என எதிர்பார்ப்பதை விட, இருக்கும் பழைய சேனலை வாங்க முடிவெடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அவர் வாங்கும் சேனலுக்கு வாகை டிவி என பெயர் சூட்ட முடிவு செய்துள்ளார். இனி மற்ற நியூஸ் சேன்னல்கள் எல்லாம் காலி தான் என்று விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Response