தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற நிலையில் நடிகர் விஜய் மிகவும் ஆக்ரோஷமாக பேசினார்.
அவர் அப்படி பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை என நடிகர் ராதிகா கூட கூறியிருந்தார். நடிகர் விஜய் பொதுவாகவே மேடைகளில் பேசும்போது மிகவும் அமைதியாக பேசுவார். அவர் பொது வெளியில் கூட அவ்வளவாக பேச மாட்டார் என்றுதான் பலரும் கூறுவார்கள். அப்படி இருக்கும்போது அரசியல் களம் என்று வந்தவுடன் நடிகர் விஜய் மிகவும் ஆவேசமாகவும் ஆக்ரோஷமாகவும் பேசினார். நடிகர் விஜய் பேசியது பலருக்கு வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கலாம்.
இந்நிலையில் மாநாட்டு மேடை பேச்சுக்களில் விஜய் அன்பான பண்பான அறிவுரை வழங்குவது அழகான குட்டி ஸ்டோரி சொல்வது தான் வழக்கம் அதே போல் தன்னை அமைதியானவராகவும் குரல் உயர்த்தி காட்டாதவாறாகவும் காண்பித்து கொள்ள திடீரென அரசியல் மாநாட்டில் உணர்ச்சி பூர்வமாக பேசியது ஆச்சர்யத்தில் ஆழ்த்தியகியுள்ளது அதை கலாய்க்கும் விதமாக இது action மேடம் என்ற பிரபல மீம்ஸ்யை குறிப்பிட்டு வீடியோ எடிட் செய்து அதை இணையசத்தில் வெளியிட அது வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/reel/DBqvpHBzw5P/?igsh=MTBxNnc1NDhqNXY0cA==