பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட நபர் ஒருவர் கன்னடம் பேசத் தெரியாத மற்றொரு நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்போது பேசுபொருளாகியுள்ளது.
அந்த காணொளியில் கன்னடம் பேசத் தெரியாத நபரிடம் காணொளியை பதிவு செய்த நபர் 12 வருடமாக கர்நாடகாவில் இருக்கிறீர்கள் கன்னடம் பேசத் தெரியாதா என கேள்வி எழுப்புகிறார்.
அதற்கு அந்த நபர் எனக்கு கன்னடம் படிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று கூறுகிறார். கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர் நீங்கள் இருக்கும் இடத்தின் கலாச்சாரத்தையும் மொழியையும் மதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
இந்த காணொளி வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் கன்னடம் பேச வேண்டுமா வேண்டாமா என்பது ஒவ்வொருவரையும் விருப்பத்தை பொறுத்தது. யாரும் கட்டாயப்படுத்த கூடாது என்ற தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
https://x.com/ManjuKBye/status/1851440787826896959?t=LqCk9tMlZOO40yjv3uMsZA&s=19