த வெ க கட்சிக்கு வியூகம் வகுத்துக் கொடுப்பவர் இவர்தானா?

எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள ஒரு வியூகம் வகுக்கும் குழுவை வைத்துக்கொள்வது நடைமுறையில் உள்ளது.

அந்த வகையில், நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு பிரபல வியூகவாதி ஜான் வியூகம் வகுத்துக் கொடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஜான் யார் என்றால், 2016-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது, பா.ம.க அன்புமணியை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி தேர்தலை எதிர்கொண்டபோது, ‘மாற்றம் – முன்னேற்றம் – அன்புமணி’ என்ற பரப்புரை முழக்கத்தை ட்ரெண்ட் செய்தவர் என்பது தெரியவந்துள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். த.வெ.க-வின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. த.வெ.க மாநில மாநாட்டுக்கு காவல்துறை ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்தாலும், அந்த நிபந்தனைகளை நிறைவேற்றி மாபெரும் மாநாட்டை நடத்துவதில் த.வெ.க தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில்தான், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு பிரபல வியூகவாதி ஜான் வியூகம் வகுத்துக் கொடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

2021- ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, பிரபல வியூகவாதி பிரசாந்த் கிஷோர், தி.மு.க-வுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்தார். இதற்கு முன்னர், பிரசாந்த் கிஷோர் 2014 மக்களவைத் தேர்தலின்போது, பா.ஜ.க-வுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்தார்.

காங்கிரஸ் கட்சிக்கு சுனில் கனுகோலு வியூகவாதியாக செயல்பட்டு வருகிறார். இப்படி எல்லா அரசியல் கட்சிகளும், தேர்தலின்போது, அவரவர் சக்திக்கு ஏற்ப வியூகவாதிகளை வைத்துக்கொள்கின்றனர்.

அந்த வகையில், நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு பிரபல வியூகவாதி ஜான் வியூகம் வகுத்துக் கொடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஜான் யார் என்றால், 2016-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது, பா.ம.க அன்புமணியை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி தேர்தலை எதிர்கொண்டபோது, ‘மாற்றம் – முன்னேற்றம் – அன்புமணி’ என்ற பரப்புரை முழக்கத்தை ட்ரெண்ட் செய்தவர் என்பது தெரியவந்துள்ளது.

ஜான் வகுத்துக் கொடுக்கும் வியூகம் த.வெ.க வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பது விரைவில் தெரியவரும்.

Leave a Response