திருட்டுதனமாக முதலாளியுடன் மனைவி இருந்த வீடியோவை வெளியிட்ட தொழிலாளர்கள் : அதிர்ச்சி ட்விஸ்ட்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே தம்பதியின் நெருக்கமான வீடியோவை அனுப்பி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக தம்பதி அளித்த புகாரின் பேரில் போலீசார் இரண்டு இளைஞர்களை விசாரிக்க முயன்ற போது, தற்போது இரண்டு பேரும் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. வேலை செய்த நிறுவனத்தின் முதலாளியை இரண்டு பேரும் மிரட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கேரள எல்லை பகுதியில் ஒரு தம்பதி சுற்றுலா மற்றும் வேன் உள்பட வாகனங்களை வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வருகிறாரக்ள். இவர்களிடம் கன்னியாகுமரி மாவட்டம் மாங்கோடு வெள்ளச்சிபாறை ஓடவள்ளி பகுதியை சேர்ந்த 27 வயதாகும் சங்கீத் , கேரள மாநிலம் நிலமாமூடு பகுதியை சேர்ந்த 26 வயதாகும் மிதுன் ஆகியோர் வேலை செய்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தம்பதியினருக்கும், மிதுன், சங்கீத் ஆகியோருக்கும் இடையே வேலை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருமே சுற்றுலா டிராவல் நிறுவனம் நடத்தும் தம்பதியிடம் வேலைக்கு வரவில்லையாம். அதேநேரம் சுற்றுலா டிராவல் நிறுவன தம்பதி இருவரும் தனிமையாக இருந்த அந்தரங்க வீடியோவை மனைவியின் செல்போனுக்கு அனுப்பி உள்ளார்கள், இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண், கணவரிடம் அதுபற்றி கூறியுள்ளார்.

பின்னர் இந்த வீடியோ தம்பதியின் பக்கத்து வீட்டுக்காரர்களின் செல்போனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பக்கத்து வீட்டில் உள்ளவருக்கு வந்த வீடியோவை குறிப்பிட்டு, வெளிநாட்டு எண்ணில் இருந்து தம்பதிக்கு போன் வந்திருக்கிறது. அதில் உங்களது அந்தரங்க வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் தர வேண்டும் என மர்ம நபர் ஒருவர் பேசியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் வெள்ளறடை போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

பின்னர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்தரங்க வீடியோவை சங்கீத் மற்றும் மிதுன் ஆகியோர் தான் வெளியிட்டுள்ளனர் என்பதை கண்டுபிடித்தார்கள் இதனை தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள். இருவரும் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவர்களை பிடித்தால் தான் எப்படி வீடியோவை எடுத்தார்கள் என்பது தெரியவரும். ஏனெனில் இந்த வீடியோவை அவர்கள் ரகசிய கேமரா வைத்து எடுத்தார்களா? அல்லது சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவரின் செல்போனில் இருந்து திருட்டுத்தனமாக எடுத்தார்களா? என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும். வேலை செய்த நிறுவனத்தின் முதலாளியின் அந்தரங்க வீடியோவை எடுத்து பணம் கேட்டு ஊழியர்கள் மிரட்டிய சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Response