தமிழ்நாடு துணை முதல்வரா? ஆந்திரா துணை முதல்வரா?

பிரபல நடிகரும், ஆந்திரா மாநிலத்தின் துணை முதல்வருமாக இருப்பவர் பவன் கல்யாண். திருப்பதி லட்டு தொடர்பாக சமீபத்தில் எழுந்த சர்ச்சைக்காக பவன் கல்யாண் விரதம் இருந்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து சனாதன தர்மத்துக்கு எதிராக பேசக் கூடாது என்றும் கூறி வருகிறார். சமீபத்தில் பவன் கல்யாண், செய்தி தொலைக்காட்சிக்கு அளித்திருந்த பேட்டி சமூகவலைதளங்களில் வைரலானது. அதில் அவர் தமிழ்நாட்டுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு குறித்து பேசியிருந்தார். தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த கலைஞர்கள் பெயரை சொல்லி பாராட்டியிருந்தார்.

திருப்பதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பவன் கல்யாண், சனாதன தர்மத்தை அழிக்க போவதாக சிலர் சொல்கிறார்கள். உண்மையில், சனாதனத்தை அழிக்க நினைக்கிறார்களோ, அவர்கள்தான் அழிந்து போவார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் மீது விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து தமிழ்நாடு துணை முதல்வர் VS ஆந்திரா துணை முதல்வர் என்று சமூகவலைதளங்களில் விவாதம் நடத்தி வருகின்றனர். பவன் கல்யாண் மீது திமுகவினரும், திமுக மற்றும் உதயநிதி மீது பவன் கல்யாண் ஆதரவாளர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றனர்.

Leave a Response