பாலியல் குற்றவாளிக்கு தேசிய விருதா? – கழுவிக்கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.

தமிழில் வெளியான மேகம் கருக்காதா , காவாலா , அரேபிக் குத்து உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற பாடல்களில் நடனக்கலைஞராக பணியாற்றியவர் ஜானி மாஸ்டர்.

சமீபத்தில் மேகம் கருக்காதா பாடலுக்கு இவருக்கு சிறந்த நடனக்கலைஞருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்கள் முன்பாக ஜானி மாஸ்டர் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு வைத்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஜானி மாஸ்டருக்கு ரங்கா ரெட்டி மாவட்ட நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது . அக் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெற உள்ள தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்துக்கொள்வதற்காக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டில் கைதாகியுள்ள ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது வழங்குவது குறித்து பல்வேறு கேள்விகள் இருந்து வந்தன. இந்நிலையில் தேசிய விருது வாங்க அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கழுவிக்கழுவி ஊற்றி வருகின்றனர்.

Leave a Response