பெங்களூரில் மகாலட்சுமி கொலையால் அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம், ஆழமான பின்னணியைக் கொண்டுள்ளது. செப்டம்பர் 3ஆம் தேதி, முக்தி, மகாலட்சுமியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, கொலை செய்தார்.
இந்த கொலை சிறிது நாட்களுக்கு முன்பாகவே திட்டமிடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அதன்பின், உடலை 59 துண்டுகளாக வெட்டிவிட்டு, குளிர்பதனப் பெட்டியில் 18 நாட்கள் வைத்திருந்தார். முக்தி, தப்பிச் செல்லும் முன், மகாலட்சுமியின் உடலை எவ்வாறு அழிப்பது என்று வீடியோ பார்த்ததாகவும், அதன் அடிப்படையில் இந்த கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
கொலையின் பின்னணி என்பது இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிணக்குகள் மற்றும் சண்டைகளில் உள்ளது. மகாலட்சுமி, முக்தியை திருமணம் செய்ய வற்புறுத்திய போது, இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. செப்டம்பர் 3ஆம் தேதி வந்த சண்டையின் போது, முக்தி, மிகக் கூர்மையான கத்தியை வாங்கி கொலை செய்து, உடலை துண்டாக்கினார். இந்த கொலைக்கு, முக்தி சமீபத்தில் சமூக ஊடகங்களில் கண்ட சம்பவங்களின் தாக்கம் இருந்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
கொலைக்குப் பின் முக்தி, ஒடிசாவிற்கு தப்பிச் சென்றார், ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டார். மேலும் மகாலட்சுமியின் நடத்தையால் விரக்தி அடைந்து அவரை கொலை செய்ததாக குற்றவாளி தன்னுடைய டைரியில் எழுதி வைத்துள்ளார். அதோடு மகாலட்சுமி கொலை செய்யப்படுவதற்கு முன்பாக தன்னுடன் வேலை பார்த்த சக ஊழியர்கள் 3 பேருடன் தகராறு செய்துள்ளார். மேற்கண்ட உண்மைகள் அனைத்தும் தற்கொலை செய்து கொண்ட முக்தி சஞ்சன் ராய் என்பவர் டைரி மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் ஏற்கனவே மகாலட்சுமிக்கு திருமணம் ஆகி ஒரு மகள் இருக்கும் நிலையில் கடந்த 9 மாதங்களாக கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.