இதுதான் உங்களின் திராவிடம் மாடல் தயாநிதி மாறன் அவர்களே..? – கேள்விகளை அடுக்கும் வானதி ஸ்ரீனிவாசன்

இதுதான் உங்கள் திராவிடத்தின் வளர்ப்பா தயாநிதி மாறன் அவர்களே? என்ற பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவரின் செய்தி குறிப்பில், நமது மத்திய அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் இருக்கும், ஒரு பெண் அமைச்சரைப் பற்றி, “முதல்வராகும் கனவுடன் டேரா போட்டவர்” என்ற பொய் அவதூறுகளைப் பரப்புவதும், “நீ, வா, போ” என மரியாதையும் நாகரிகமுமின்றி பொதுவில் ஒருமையில் பேசுவதும் கடும் கண்டனத்திற்குரியது.

ஒரு பெண் அரசியலிலும் அதிகாரத்திலும் வளர்ந்து வந்தால், நீங்களும் உங்கள் கட்சிக்காரர்களும், கூட்டணிக் கட்சித் தலைவர்களும், உங்கள் கூலிப்படைப் பேச்சாளர்களும் அவர்களை எத்தனை கீழ்த்தரமாக விமர்சிக்கவும் தயங்க மாட்டீர்கள் என்பதை நாங்கள் கண்டிருக்கிறோம்.

,

ஆனால் நமது மத்திய நிதியமைச்சரான திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களைப் பற்றி, நீங்களும் உங்கள் கூட்டணிக் கட்சித் தலைவரான திரு. EVKS இளங்கோவன்அவர்களும் மாறி மாறி சர்ச்சைக்குரிய கருத்துக்களால் காழ்ப்புடன் விமர்சிக்கிறீர்களே, இதுதான் திராவிடத்தின் கொள்கையா? இதைத்தான் இண்டி கூட்டணியே தங்கள் கொள்கையாக முழங்குகிறீர்களா?

ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள உங்களுக்கு, முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்த நமது மத்திய நிதியமைச்சரைப் பற்றி பேச குறைந்தபட்ச தகுதியாவது இருக்கிறதா?

எனவே, அரசியலில் வளர்ந்து வரும் பெண்களையும், அதிகாரத்தில் மிளிரும் பெண்களையும் கண்டு அஞ்சி, பொறாமையில் பொங்கி இப்படி மட்டமான கருத்துக்களால் விமர்சிப்பதை விட்டுவிட்டு, உங்கள் கட்சியனருக்கே பழக்கமில்லாத “நாகரிக அரசியலை” நீங்களாவது முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Leave a Response