தேனி மாவட்டத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவியை அடையாளம் தெரியாத மர்ம நம்பர்கள் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விட்டுச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டதை சேர்ந்த மாணவி ஒருவர் தேனியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் இந்நிலையில் இன்று 23.09.24 காலை தனது சொந்த ஊரில் இருந்து தேனிக்கு பேருந்தில் வந்துள்ளார். பழைய பேருந்து நிலையம் அருகே வந்த போது அப்பொழுது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மாணவியை காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் மாணவியை அதே காரில் திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே இறக்கி விட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர் இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தார். போலீசார் மாணவியை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
தற்பொழுது திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கேரளாவை சேர்ந்த மர்ம நம்பர்கள் காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார் இதனை அடுத்து காவல்துறையினர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.