கள்ளக்காதலி கூட்டு பலாத்காரம் : அதில் ஒருவர் துப்பாக்கியால் சூடு

மானாமதுரை பகுதியில் இளம் பெண் ஒருவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வந்துள்ளார். இவர் தற்போது புளியங்குளம் பகுதியில் வசித்து வந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இதனால் இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது ஒரு நாள் ஊருக்கு வெளியே உள்ள முந்திரி காட்டில் சந்தித்த போது அங்கு குடிபோதையில் ஒரு கும்பல் வந்துள்ளது. அந்த கும்பலில் உள்ளவர்கள் இவர்கள் இருவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது அந்தப் பெண்ணை விட்டு அந்த இளைஞர் ஓடிவிட்டார். இதனால் அந்த கும்பலிடம் மாட்டிக்கொண்ட அந்த இளம் பெண் அந்த நபர்களிடம் சிக்கி பாலியல் வன்முறைக்கு ஆளானார். பின்னர் அந்த கும்பலில் இருந்து தப்பித்து மானாமதுரை காவல்துறையில் புகார் செய்தார். இந்த புகாரின் பெயரில் குற்றவாளிகளை பிடிக்க தனி படை அமைக்கப்பட்டது. காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில் 7 பேர் கொண்ட கும்பல் மது போதையில் இளம் பெண்ணை பாலியல் வன்முறை செய்து தெரியவந்தது.

இது தொடர்பாக முத்துக்குமார் என்பவரை விசாரிக்க சென்ற பொழுது போலீசாரிடமிருந்து தப்பித்து ஓடினார். அப்போது அவரைத் துரத்தி சென்ற காவல் துறையினர் முத்துக்குமாரின் வலது கால் பகுதியை நோக்கி சுட்டு பிடித்தனர். அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் தொடர்புடைய நபர்கள் யார் என்பதை குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை படுத்தியுள்ளது.

Leave a Response