தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்தும் வேளையில், திமுக நபருடன் செல்பி எடுத்த தவெக தலைவர் விஜய்

தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் திடலுக்கு சென்ற த.வெ.க. தலைவர் விஜய், பெரியாரின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு தவெக தலைவர் நடிகர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை. பெரியாருக்கு மாலை அணிவித்து உள்ளார். பெரும்பாலும் அவரின் கொள்கை மதசார்பற்ற கட்சி கொள்கையாகவே இருக்கும், என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் செயல் திராவிட உணர்வாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பெரியார் பெயரை உச்சரிக்காமல் அரசியல் நடத்த முடியாது என்பதை விஜய்யின் செயல் காட்டுகிறது; திராவிட கருத்துகளை ஏற்றுக்கொண்டு விஜய் செயல்பட்டால் மகிழ்ச்சியே என்று அவர் கூறியுள்ளார்.

அதேபோல் பெரியார் திடலுக்கு விஜய் சென்றது ஆச்சரியமில்லை; பாசிசத்தை எதிர்த்த பெரியார் பாதையில் விஜய் வருவது மகிழ்ச்சியே” மதவாதத்துக்குள் சிக்காமல் விஜய் கட்சியை நடத்த வேண்டும்; பெரியார் திடலுக்கு விஜய் சென்றதை காங்கிரஸ் வரவேற்கிறது, என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

அப்போது நடைபெற்ற சம்பவம் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. பெரியார் திடலில் தவெக தலைவர் விஜய்யுடன் திமுக ஆதரவாளர் ஒருவர் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

திமுக கொடி போட்ட உடையுடன் வந்த அந்த நபர்.. சட்டென விஜய்யை பார்த்ததும் செல்பி கேட்டார். அவரின் உடையில் கருப்பு சிவப்பை கவனித்த விஜய்.. எதுவும் சொல்லாமல் அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டார். இந்த சம்பவம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இப்போது கிட்டத்தட்ட திமுக, அதிமுகவின் அதே கொள்கையை விஜய் பேச தொடங்கி உள்ளார். திமுகவிற்கு கண்டிப்பாக விஜய் போட்டிதான்.. அதே சமயம்.. திமுக வலுவான தலைமையுடன் இருக்கும் நிலையில், தோல்வி முகத்தில் இருக்கும் அதிமுகவின் வாக்குகளை குறி வைத்து விஜய் களமிறங்குகிறாரோ என்ற கேள்வி உள்ளது.

இன்னொரு பக்கம் விசிக, காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக புதிய கூட்டாளி கிடைக்கும் சூழலை விஜய் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். பாஜகவோடு சேர முடியாத விசிக, காங்கிரஸ் போன்ற திராவிட கட்சிகளுக்கு மாற்றாக விஜய் உருவெடுத்துள்ளார்.

Leave a Response