போயும் போயும் ஒரு லைக்குக்காக பிணமாக நடிப்பதா..?

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் சமூக ஊடகங்களில் பிரபலமாக வித்தியாசமான முறையில் வீடியோக்களை எடுத்து ஆன்லைனில் பதிவு செய்கின்றனர்.

அந்த வகையில் தற்போது உத்திரபிரதேசத்தில் உள்ள பரபரப்பான சாலையில், வாலிபர் ஒருவர் நடுரோட்டில் படுத்து கிடந்து இறந்தது போல் போலியாக நடித்துள்ளார். இதனை அக்கம் பக்கத்தினர் இங்கே என்ன நடக்குது என்று அருகில் சென்று பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும் அந்த இளைஞர் நடுரோட்டில் அசையாமல் கிடந்தார்.

இதனை அவரது மற்ற சில நண்பர்கள் அவர்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதனைப் பார்த்த காவல்துறையினர் சம்மந்தப்பட்ட வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Response