50 பேரை ஏமாற்றிய திருமண மோசடி வழக்கில் கைதான சந்தியாவுக்கு ஜாமின்

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த பேக்கரி ஓனர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருமணத்துக்கு பெண் தேடி வந். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் ஒரு மேட்ரிமோனியல் ஆப் மூலம் பெண்ணை தேடிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆன்லைன் ஆப் மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த சந்தியா (30) என்பவர் பேக்கரி ஓனருக்கு அறிமுகம் ஆகி உள்ளார்.

பேக்கரி ஓனருடன் சந்தியா வாட்ஸ்அப் மூலம் பேசி உள்ளார். அப்போது பேக்கரி ஓனரிடம் தனது திருமணத்திற்கு வரன் தேடுவதாகவும், தமிழ்ச்செல்வி என்ற இடைத்தரகர் மூலம் வரன் தேடிக் கொண்டிருப்பதாக சந்தியா கூறியிருக்கிறார். கையோடு தமிழ்ச்செல்வியையும் பேக்கரி ஓனருக்கு சந்தியா அறிமுகம் செய்து வைத்தாராம்.

அதன்பிறகு இருவரும் செல்போனில் பழகி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை, வீட்டில் அவசரமாக திருமண ஏற்பாடு செய்கிறார்கள் எனக் கூறி, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சந்தியா, பேக்கரி கேட்டுக்கொண்டே இருந்துள்ளார். இதையடுத்து, தமிழ்ச்செல்வி தலைமையில் ராஜாவுக்கும், சந்தியாவுக்கும் கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி, பழநி அருகே ஒரு கோயிலில், இனிதே திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது, 12 சவரன் நகையை சந்தியாவிற்கு பேக்கரி ஓனரின் பெற்றோர் அணிவித்தனராம்.

ஆனால் திருமணம் நடந்த சில நாளிலேயே அப்பெண்ணின் நடவடிக்கையில் பேக்கரி ஓனருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பல ஆண்களுடன் அவர் பேசி வருவதாக சந்தேகம் வந்துள்ளது. ஒரு கட்டத்தில் சந்தியாவின் நடவடிக்கையை உன்னிப்பாக கவனிக்க தொடங்கிய பேக்கரி, அடையாள அட்டையை பார்த்திருக்கிறார். அதில், கணவர் பெயர் இடத்தில் சென்னையைச் சேர்ந்த வேறு ஒருவரின் பெயர் இருந்ததும், வயதும் அதிகமாக இருப்பதையும் பார்த்து அதிர்ந்தாராம்.

இதனால் கடும் கோபமும் அதிர்ச்சியும் அடைந்த பேக்கரி ஓனர், திருமணம் ஆனதை மறைத்து சந்தியா தன்னை திருமணம் செய்தது குறித்து அவரிடம் கேட்டுள்ளார். அப்போது, வாக்குவாதம் முற்றி கோபமடைந்த சந்தியா, பேக்கரி மற்றும் அவரது குடும்பத்தையும் மிரட்டினாராம். இதனால் உஷாரான ராஜா, சந்தியாவை சமாதானம் செய்வதுபோல் நைசாக பேசி தாராபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு விசாரித்துக் கொண்டிருக்கும்போதே சந்தியா அங்கிருந்து தப்பியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, போலீஸார் நடத்திய விசாரணையில் சந்தியாவுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் முடிந்துள்ளதாம். அதன் மூலம் ஒரு குழந்தை இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதன்பிறகு கரூரைச் சேர்ந்த எஸ்ஐ மற்றும் கொடுமுடியைச் சேர்ந்த மாட்டு வியாபாரி மகன், சர்வேயர் உள்பட 15 பேரை வரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாக சந்தியா மீது புகார் எழுந்துள்ளது.

அவர்களுடன் மனைவிபோல் சில மாதங்கள் வாழும் சந்தியா சில நாளில் வேண்டுமென்றே சண்டை போட்டுவிட்டு, நகை மற்றும் பணத்துடன் சந்தியா தலைமறைவாகிவிடுவாராம். பலர் மனைவி ஓடிப்போன விவகாரம் தெரியவந்ததால் அவமானம் என்று கருதி புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். இதனால் பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தை பறித்த சந்தியாவுக்கு புரோக்கர் தமிழ்ச்செல்வி உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இந்த விவகாரத்தில் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸார் சந்தியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சந்தியா தனக்கு ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார் .. இந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உரிய காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்ற கூறி ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது,

Leave a Response