சினிமா பாணியில் முதியவர் கொலை : கண்டுபிடித்த மகள்.

கடந்த மே மாதம் கேரளாவில் 82 வயதான சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் கார் மோதி மரணம் அடைந்தார்.

விபத்தில் மரணம் அடைந்த அந்த நபரின் பெயர் பாப்பச்சன்.. குடும்பத்தை விட்டு பிரிந்த பாப்பச்சன் கொல்லத்தில் தனியாக வசித்து வந்தார். அவரது மனைவி, ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை. கிட்டத்தட்ட 100 கிமீ தொலைவில் கோட்டயத்தில் வசித்து வந்தார். அவரது மகன் பெரும்பாலான மலையாளிகள் போலவே.. மத்திய கிழக்கிலும், மகள் உத்தரபிரதேசத்திலும் வசித்து வருகின்றனர்.

கடந்த மே மாதம் 23-ம் தேதி கொல்லத்தில் பாப்பச்சன் வெறிச்சோடிய பகுதி ஒன்றில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ​​அவர் மீது கார் மோதியது. மறுநாள் மருத்துவமனையில் பாப்பச்சன் இறந்தார். இது தொடர்பாக ஹிட் அண்ட் ரன் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டது. வழித்தடத்தில் உள்ள பல சிசிடிவி கேமராக்களில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்து அந்த சைக்கிளை மோதிய நபரின் காரைக் கண்டுபிடித்தனர். சில நாட்களுக்குப் பிறகு, கார் டிரைவர் அனிமோன் போலீசில் சரணடைந்தார். அதன்பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

பாப்பச்சனின் மரணத்தை தொடர்ந்து.. சில நாட்களுக்கு துக்க காலம் முடிந்ததும், பாப்பச்சனின் மகள் கொல்லத்தில் உள்ள முத்தூட்டு மினி நிதி லிமிடெட் கிளைக்கு சென்று தனது கணக்கை முடிக்க முடிவு செய்தார். ஆனால் அங்கு அவரது தந்தையின் நிதியில் பல முரண்பாடுகள் இருப்பதை கண்டுபிடித்தார். இருப்பினும், கிளை மேலாளர் சரிதாவிடம் இருந்து அவருக்கு திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை. இதன்பின்தான் வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.

அங்கே வந்த பாப்பச்சனின் மக்களிடம் அந்த வங்கி கிளை ஊழியர் ஒருவர் தனியாக பேசி உள்ளார்.. அதன்படி.. பாப்பச்சனின் நிதியை யாரோ தவறாகப் பயன்படுத்தியதாக துப்பு கொடுத்துள்ளார். தனது தந்தையின் வைப்புத்தொகையில் பெரும்பகுதி காணவில்லை என்பதை உணர்ந்த மகள்.. அந்த விபத்து குறித்து சந்தேகம் அடைந்துள்ளார்.

இது விபத்தா அல்லது கொலையா என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து கொல்லம் உதவி போலீஸ் கமிஷனர் (ஏசிபி) எஸ் ஷெரீப்பிடம் அந்த பெண் புகார் கொடுக்கவே போலீசார் மீண்டும் வழக்கை விசாரிக்க தொடங்கினர்.

முதல் நடவடிக்கையாக .. குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் அனிமோனின் அழைப்பு விவரப் பதிவுகளை (சிடிஆர்) போலீசார் ஆய்வு செய்யத் தொடங்கினர். அவர் ஏற்கனவே பல குற்றங்களை செய்தவர் என்பதால் போலீசார் தீவிரமாக அவரின் போன் ஹிஸ்டரியை சோதனை செய்தனர்.”மே இரண்டாம் வாரத்தில் இருந்து அனிமோன் ஒரு போன் எண்ணுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த எண் பாப்பச்சன் டெபாசிட் வைத்திருந்த கிளையின் மேலாளர் சரிதாவிடம் இருந்தது. ஒரு வங்கி அதிகாரி.. அதுவும் சரியாக பாப்பச்சன் கணக்கு வைத்திருந்த வங்கியின் அதிகாரி.. அவரை கொலை செய்த நபருடன் போனில் பேசியது ஏன் என்று போலீசுக்கு சந்தேகம் வந்தது.

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம்.. வேறு ஒரு வகையில் வழக்கு விரிவடைந்தது. சரிதாவுக்கும் அனிமோனுக்கும் உள்ள தொடர்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், பாப்பச்சனின் குடும்பத்தினர், அவரது டெபாசிட் கணக்கில் முறையற்ற பரிவர்த்தனைகள் நடந்ததாக நிதி நிறுவனத்தில் புகார் அளித்தனர். அந்த நிறுவனம் நடத்திய விசாரணையில் பாப்பச்சனின் டெபாசிட் கணக்கில் இருந்து சரிதா ரூ.25 லட்சம் முறைகேடு செய்தது தெரியவந்தது. இதையடுத்து சரிதா பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த பணத்தை எடுத்ததை பாப்பச்சன் கண்டுபிடிக்க கூடாது.. பணத்தை மீண்டும் கேட்க கூடாது என்பதற்காகவே அவரை சரிதா திட்டமிட்டு கொன்றார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதோடு இல்லாமல் பாப்பச்சனின் வங்கி கணக்கில் இருந்து.. அதை பயன்படுத்தி சரிதா 4 லோன்களை வேறு எடுத்துள்ளார். இதை எல்லாம் கண்டுபிடித்து சரிதாவிடம் அவர் விசாரிக்கவே கோபம் கொண்ட சரிதா ஆள் வைத்து அவரை கொன்றுள்ளார். கிட்டத்தட்ட 48 லட்சத்தை சரிதா அந்த கணக்கில் இருந்து திருடி உள்ளார். அவரின் கணக்கில் 75 லட்சம் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 27 லட்சம் மட்டுமே இருந்துள்ளது .

பாப்பச்சன் தனியாக இருந்தது சரிதாவிற்கு தெரியும்.. அதோடு பாப்பச்சன் பணத்தை செலவு செய்ய விரும்பாதவர். ஆனால சேமிக்க விரும்பும் நபர். உதாரணமாக அவரிடம் கார் பைக் இல்லை. சைக்கிள் மட்டுமே உள்ளது. இறந்த அன்று பெல்ட் கூட அணியாமல் கயிறு ஒன்றை வைத்து பேண்டை கட்டி இருந்துள்ளார். அப்படிப்பட்ட நபருக்கு.. 75 வயதில் பணம் எதற்கு என்று எண்ணி.. அவரை கொலை செய்ததாக சரிதா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Leave a Response