வந்திதா பாண்டேவுக்கு கனிமொழி ஆதரவு

திருச்சி மாவட்டத்தில் வருண்குமார் ஐபிஎஸ் என்பவர் எஸ்பி ஆக செயல்பட்டு வருகிறார். இவருடைய மனைவி வந்திதா பாண்டே என்பவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்பி ஆக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் வந்திதா பாண்டேக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் இணையத்தில் ஆபாசமாக பேசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதோடு அவதூறான கருத்துக்களையும் அவர்கள் பதிவிட்டு வரும் நிலையில் வருண் குமாரும்,வந்திதா பாண்டேவும் எக்ஸ் தளத்திலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர் கூறியுள்ள அறிக்கையில் “ஒரு சராசரி குடும்ப நபராக குழந்தைகள், பெற்றோர்கள் மீது கொண்டுள்ள அக்கறை காரணமாக எக்ஸ் தளத்திலிருந்து நானும் எனது மனைவியும் தற்காலிகமாக விலகு முடிவு செய்துள்ளோம்” என்றும், இதனை நாங்கள் பயத்தினால் செய்யவில்லை, இதற்காக கெட்ட புத்தியும், கொடூர எண்ணமும் கொண்டவர்கள் தான் அவமானப்பட வேண்டும் என்றும் பதிவிட்டு இருந்தனர். இதனை அறிந்த எம்பி கனிமொழி வந்திதா பாண்டேவுக்கு ஆதரவாக எக்ஸ் பகுதியில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் “பெண்கள் எந்த துறையில் இருந்தாலும் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அவர்கள் சார்ந்த ஆணை இழிவு படுத்தும் விதமாக அந்தப் பெண்ணை ஆபாசமாக இழிவு படுத்துவதும் பிரச்சாரம் செய்வதும் ஏற்றுக்கொள்ள முடியாத இழிவான செயல்” என்றும், அவர்கள் மீது ஆபாச தாக்குதல் நடத்தி வரும் அனைவரின் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அதோடு வந்திதா பாண்டேவின் உழைப்பு சமூக அக்கறை கொண்டதாக காணப்படுகிறது என்றும், அவர்களின் நல்லெண்ணத்தை பாராட்டியும் எனது ஆதரவையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று எம்பி கனிமொழி பதிவிட்டுள்ளார்.

Leave a Response