நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி தற்போது திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஒரு ராஜ்ய சபா சீட்டை மக்கள் நீதி மய்யத்திற்கு திமுக வழங்கியுள்ளது.
அதன்படி, அதன்படி அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமல் ஹாசன் எம்பியாக தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. இதுகுறித்து ரவி என்ற பெயரில் எக்ஸ் பக்கத்தில் செயல்பட்டு வரும் நபர் ஒருவர், “இந்த குரூப்-ல டூப் வேற காமெடி பண்ணிட்டு” என கிண்டல் செய்திருந்தார்.
இவரின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகையும், மக்கள் நீதி மய்யம் கட்சியில் செயல்பட்டு வருபவருமான வினோதினி ட்விட்டர் எக்ஸ் தளத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அவர் தனது பதிவில், “அம்பானி திருமணத்தில் ஆடியதில்லை, ஆதித்தநாத் காலில் விழுந்ததில்லை. இகழ்ந்து பேசாதோர் நம் தொண்டர் ஈஷா யோகம் கண்டதில்லை.
உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட்டை எதிர்த்த போராளி சாவுகள் நாட்டைச் சுடுகாடாக்கும், போராளிகள் தீவிரவாதிகளென சொல்லவில்லை ஊழியர்களுக்கு சம்பளம் தராமலிருந்ததில்லை, எப்போ வருவேன் எப்படி வருவேன் என்று பஞ்ச் பேசாமல் வந்துவிட்டோம்.
ஏழ்மை இந்தியாவில் பணமதிப்பிழப்பை ஆதரிக்கவில்லை. ஐந்நூறு கோடி வசூலிருந்தும் ஆறரை லட்ச சொத்து வரி செலுத்தாமலில்லை ஒருநாளும் சரியான வருமானவரி கட்டாமலிருந்ததில்லை. So…ஓரமாகப் போய் அழவும், அஃது உத்தமம்” என்று கூறியுள்ளார்.