கோபத்தில் கணவனின் தலையை நசுக்கிய மனைவி : பேரதிர்ச்சி.

உத்திரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் என்னும் கிராமத்தில் சத்தியபாலு என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி காயத்ரி.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதையடுத்து கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் இதில் கவனம் செலுத்துவதில்லை. இந்நிலையில் சம்பவம் நடந்தநாளன்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் கோபமடைந்த காயத்ரி, சத்யபாலுவை வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து அவரை கீழே தள்ளியுள்ளார்.

பின் அவரது மார்பு மீது ஏறி அமர்ந்து, செங்கல்லால் அவரது கணவரின் தலையை நசுக்கியுள்ளார். இதில் சத்யபாலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடித்துடித்து உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து காயத்ரி கணவரை கொன்ற பிறகும் அங்கிருந்து செல்லாமல் வீட்டிற்குள் சென்றுள்ளார். இந்த கொடூர சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த கிராம மக்கள் சத்யபாலுவை காப்பாற்றுவதற்காக யாரும் முன்வரவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயத்ரியை கைது செய்ததுடன் சத்யபாலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் காயத்ரியிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தை பற்றிவீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response