யார் இந்த தேவநாதன்? மக்கள் பணத்தில் தான் தேர்தலில் நின்றாரா..?

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் யாதவ். இவர் பாஜக கட்சியின் ஆதரவாளர்.

இவர் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கும் நிலையில் மயிலாப்பூரில் செயல்பட்டு வரும் மயிலாப்பூர் இந்து சாஸ்தவ நிதி லிமிடெட் நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.

இந்த நிறுவனத்தில் சுமார் 525 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக தேவநாதன் மீது புகார் எழுந்தது. இந்த மோசடி தொடர்பாக கடந்த ஜூன் மாதம் அந்நிறுவனத்தின் முன்பு ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வந்த நிலையில் தேவநாதன் யாதவ் ‌ தலைமறை வாகிவிட்டார்.

தற்போது திருச்சியில் பதுங்கி இருந்த அவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவரை சென்னைக்கு அழைத்து வந்து பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இவர் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கட்சியின் சார்பில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் மாவட்டம் திரு வாடானை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அப்போது சுமார் 11,842 வாக்குகள் பெற்றிருந்தார். இதைத்தொடர்ந்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அவருக்கு பாஜக சார்பில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. இதே தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்ட நிலையில் அவர்தான் வெற்றி பெற்றார். இந்த நிலையில் தான் அவர் மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனத்தில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவதாக கூறி பொதுமக்களிடம் மோசடி செய்ததாக கடந்த ஜூன் மாதத்தில் புகார் எழுந்தது. இது தொடர்பாக மொத்தம் 140 பேர் அவர் மீது புகார் கொடுத்திருந்தனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்துள்ளனர்.

Leave a Response