தகாத உறவு: தங்கையை கழுத்து நெறித்துக் கொன்ற அண்ணன்: மதுரையில் பயங்கரம்

மதுரை கீரைத்துறை மேலத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அங்கமுத்து இவருக்கு திலகவதி ( 32) மற்றும் தமிழ் ராஜ் (41) என்று இரு பிள்ளைகள் உள்ளன.

தமிழ் ராஜா ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்.
திலகவதிக்கு ராணுவத்தில் பணியாற்றும் கண்ணன் என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திலகவதிக்கு மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த ராகவேந்திரன் என்பவருடன் தவறான தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த விஷயம் திலகவதியின் சகோதரரான தமிழ்ராஜ் கவனத்திற்கு வர திலகவதியை தமிழ் ராஜ் கண்டித்துள்ளார். அண்ணன் பேச்சை பொருட்படுத்தாமல் தொடர்ந்து திலகவதி கள்ள தொடர்பில் இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தமிழ்ராஜ்க்கும் திலகவதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .இந்நிலையில் இன்று வழக்கம் போல இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட ஆத்திரத்தில் வீட்டிலிருந்த கயிற்றால் திலகவதியின் கழுத்தை நெரித்து தமிழ் ராஜ் கொலை செய்துள்ளார்.

தங்கையை கொலை செய்த தமிழ்ராஜ் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி உள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீரைத்துரை காவல்துறையினர் கயிற்றில் தொங்கியபடி சடலமாக கிடந்த திலகவதியின் உடலை மீட்டு உடற்கூரய்வுக்காக அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து கொலை குறித்து வழக்குப்திவு செய்து தலைமறைவாக உள்ள தமிழ்ராஜை கீரைத்துறை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Response