கட்சிக்காக உழைச்சு ஓடா தேஞ்சிட்டோம் எங்களுக்கு என்ன கிடைச்சது..? – கே என் நேருவிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்திய திமுக கவுன்சிலர்.

கட்சிக்காக உழைச்சு ஓடா தேஞ்சிட்டோம். கட்சிக்காக 50 வருஷம் கஷ்டப்பட்டு கோடி கணக்குகளில் இழந்து ஒடுக்கப்பட்டிருக்கிறோம் என அமைச்சர் நேரு முன் திமுக கவுன்சிலர் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

கோவை மாநகராட்சி மேயராக இருந்த திமுகவைச் சேர்ந்த கல்பனா என்பவர் கடந்த மாதம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து புதிய மேயரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேதியில் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் திமுக சார்பில் மேயர் வேட்பாளர் தேர்வு செய்யும் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நெரு,முத்துசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அதில் திமுக கவுன்சிலர்கள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டம் முடிவில் திமுக மேயர் வேட்பாளராக 29 வது வார்டு கவுன்சிலரான ரங்கநாயகி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ரங்கநாயகி தவிர வேற யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், புதிய மேயராக போட்டியின்றி ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டதாக ஆணையாளர் அறிவித்தார். தொடர்ந்து அவருக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இதற்கு முன்பாக கவுன்சிலர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே.என் நேரு பேசினார். கவுன்சிலர் சாந்தி முருகன் என்பவர் கட்சிக்காக உழைச்சு ஓடா தெஞ்சிட்டோம். கட்சிக்காக 50 வருடம் கஷ்டப்பட்டு கோடிக்கணக்கில் இருந்து ஒடுக்கப்பட்டிருந்தோம். சும்மா ஒன்னும் வரல இதையெல்லாம் பார்த்துட்டு பொறுத்துக்கிட்டு இருக்க முடியாது என அமைச்சர்கள் நேரு, முத்துசாமி முன்னிலையில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் நேரு, நீங்க எல்லாம் எப்படி உறுப்பினராகி வந்தீர்களோ, அதே மாதிரி தான் நானும் சேர்மன் ஆகி இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது இப்போ சொல்லி இருக்கீங்க இதை செய்து கொடுப்போம்.உறுதியாக செய்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Response