மாணவனை அறிவாளால் வெட்டிய மாணவன்: திருச்சியில் அதிர்ச்சி

திருச்சி ஸ்ரீரங்கம் சிங்கக் கோவில் தெருவில் அரசு ஆண்கள் உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

கடைசி பாட வகுப்பை 12ஆம் வகுப்பு வணிகவியல் ஆசிரியரான சிவக்குமார் வகுப்பறையில் எடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென ஒரு மாணவர் முகத்தை மறைக்கும் வகையில் முகக் கவசம் அணிந்து உள்ளே வந்தார். தனது பேண்டில் மறைத்து வைத்திருந்த நீளமான கத்தியை எடுத்து திடீரென வணிகவியல், வரலாறு படிக்கும் சக மாணவரின் கையில் வெட்டி உள்ளார்.

இதனை பார்த்த ஆசிரியர் சிவக்குமார் தடுக்க சென்ற பொழுது அவர் தலையில் அந்த மாணவர் வெட்டி உள்ளார். காயமடைந்த ஆசிரியரை சகமானவர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அழைத்து வந்தனர். இந்த இரண்டு மாணவர்களுக்கும் முன்பகை உள்ளதாக போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.

மேலும், கல்வி பயிலும் சிறார் வயதிலேயே கத்தியை எடுத்து வந்து மாணவர்கள் கண் முன்னே, வகுப்பில் புகுந்து சக மாணவரையும், ஆசிரியரையும் வெட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Response