இந்திய அரசியல்வாதி மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த தொழிலதிபர் ஓம் பிர்லா. இவர் மக்களவை சபாநாயகராக இருக்கிறார்.
இவருடைய மனைவி அமிதா பிர்லா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவருடைய 2 வது மகள் அஞ்சலி பிர்லா மாடலிங் தொழில் செய்து வந்தார் .
இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு எழுதிய யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற இவர் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இணைய தளங்களில் அஞ்சலி பிர்லா குறித்து சில பதிவுகள் வெளிவந்துள்ளன. அதாவது அஞ்சலி பிர்லா தேர்வு எழுதாமலேயே ஐஏஎஸ் ஆனார் என்று பல இணையதள வாசிகள் கூறியுள்ளனர் .இந்த பதிவு பெரிய சர்ச்சையை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து அஞ்சலி பிர்லா தன் மீது அவதூறு பரப்பும் இணையதள பதிவுகளை நீக்க வேண்டி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.