சென்னை சாலிகிராமத்தில் 15 வயது சிறுவனை 30 வயது பெண் காதலித்த சம்பவத்தால் பரபரப்பு

சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த அந்த பெண்ணுக்கு 30 வயதாகிறது..

ஆனால் இன்னும் திருமணமாகவில்லை.. அதே பகுதியிலுள்ள துணிக்கடை ஒன்றில் இந்த பெண் வேலை பார்த்து வருகிறார்.

இதே துணிக்கடையில் 15 வயது சிறுவனும் வேலை பார்த்து வருகிறான்.. குடும்பத்தில் வறுமை காரணமாக, இந்த வேலைக்கு வந்துள்ளான் அந்த சிறுவன்.. ஒரே கடையில் பணிபுரிவதால், அந்த பெண்ணும், சிறுவனும் சகஜமாக பழகினார்கள்.. நாளடைவில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அதுவே அளவுக்கு அதிகமான நெருக்கத்திலும் கொண்டுபோய் விட்டது.

சிறுவன் வேலைக்கு சேர்ந்தபோது, சாதாரணமாகதான் இந்த பெண் பழகியிருக்கிறார்.. ஆனால், திடீரென அந்த சிறுவனின மீது காதல் வந்துவிட்டது.. இதற்கு பிறகே, ஆசை வார்த்தைகளை சொல்லி, தன்னுடைய வலையில் சிறுவனை வீழ்த்தியிருக்கிறார்..

வித்தியாசம்: தன்னைவிட 15 வயது மூத்தவரான அந்த பெண்ணை, இந்த சிறுவன் “அக்கா” என்றுதான் கூப்பிடுவாராம்.. வயது வித்தியாசம் அதிகம் இருப்பதாலும், “அக்கா” என்று அழைப்பதாலும், அந்த கடையில் யாருக்குமே இவர்கள் மீது சந்தேகம் வரவில்லையாம்.

ஒருகட்டத்தில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்திருக்கிறார்கள்.. அத்துடன், துணிக்கடை லீவு நாட்களின்போது, பல்வேறு இடங்களுக்கு சென்று 2 பேரும் உல்லாசமாகவும் ஊற்றி சுற்றி வந்தனர். இப்படிப்பட்ட சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேரும் திடீரென கல்யாணமும் செய்து கொண்டனர். ஆனால், இதைபற்றி யாரிடமும் சொல்லாமல் அவரவர் வீட்டில் வழக்கம்போல இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எதிர்காலம்: எனினும், இருவரின் நடவடிக்கையிலும், கடையிலிருந்த ஊழியர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.. 15 வயது சிறுவனின் எதிர்காலம் வீணாகிவிடுமே என்று கவலைப்பட்ட கடை ஊழியர்கள், சிறுவனின் பெற்றோரை சந்தித்து, இதை பற்றி சொல்லியிருக்கிறார்கள்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தங்களது மகனிடம் இதை பற்றி விசாரித்தனர்.. அதற்கு சிறுவன், அந்த பெண்ணை “அக்கா” என்றே பாசத்துடன் அழைப்பதாகவும், தவறாக பழகவில்லை என்றும் சொல்லி சமாளித்திருக்கிறான். எனினும், மகனை கண்டித்த பெற்றோர், அறிவுரையையும் சொல்லியிருக்கிறார்கள். அத்துடன், மகனை ரகசியமாகவும் கண்காணிக்க துவங்கினர்..

காதல் லீலைகள்: அப்போதுதான், இவர்களின் காதல் லீலைகள் பற்றி பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.. சிறுவனின் பெற்றோருக்கு விஷயம் தெரிந்துவிட்டதால், அந்த பெண் சுதாரிக்க துவங்கினார்..

உடனே சிறுவனை அழைத்துக்கொண்டு வெளியூருக்கு தப்பிச்செல்ல முடிவு செய்தார். இதற்காக கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில், பஸ் ஏறுவதற்காக சிறுவனுடன் காத்து கொண்டிருந்தார்.. இதுபற்றி தகவலறிந்த சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, கிளாம்பாக்கத்துக்கு விரைந்து வந்தார்கள்.. அங்கே பஸ் ஏறுவதற்கு தயாராக நின்றுகொண்டிருந்த மகனை, அந்த பெண்ணிடமிருந்து மீட்டனர். ஆனால், சிறுவனின் பெற்றோரை கண்டதுமே, அந்த பெண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

கிளாம்பாக்கம்: பின்னர் சிறுவனின் பெற்றோர் விருகம்பாக்கம் மகளிர் போலீசில் இதுகுறித்து புகார் தந்தனர். இதையடுத்து, போலீசார் மட்டுமல்லாமல், குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகளும் விசாரணையை நடத்தி வருகிறார்கள். தப்பியோடிய பெண்ணையும் தேடி கொண்டிருக்கிறார்கள்.

Leave a Response