கர்நாடகாவில் 18 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பெண் தன் பெற்றோருடன் வசித்து வரும் நிலையில், இவரின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தந்தையே சமூக வலைதளங்களில் வைரலாக்கி உள்ளார்.
இது தொடர்பாக பெண்ணின் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் தன்னுடைய மகள் ஒரு வாலிபரை காதலித்து வந்தார்.
இது என் கணவருக்கு பிடிக்காததால் அந்த வாலிபரை வீட்டிற்கு அழைத்து வந்த துன்புறுத்தினார். அதன் பிறகு அந்த வாலிபரின் செல்போனில் உள்ள தன் மகளின் அந்தரங்க புகைப்படங்களை தன்னுடைய செல்போனுக்கு டவுன்லோட் செய்தார். பின்னர் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாக்கிவிட்டார். இதனால் வேதனை தாங்காமல் என்னுடைய மகள் பினாயில் குடித்துவிட்டார். இந்நிலையில் என்னுடைய கணவர் தொடர்ந்து என்னையும் மகளையும் அடித்து துன்புறுத்துகிறார். மேலும் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.