கள்ள காதல் சம்பவத்தால் இளைஞர் வெறி

சீர்காழி அருகே இளைஞர் கள்ளத்தொடர்பில் இருந்தது தொடர்பாக அக்கம் பக்கத்தில் முதியவர் கூறியதால் அவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சீனிவாசன்(60). அதே பகுதியை சேர்ந்த அருள்செல்வன்(25) என்ற இளைஞர் பெண் ஒருவரிடம் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இதனை பார்த்த முதியவர் சீனிவாசன் இதுதொடர்பாக அப்பகுதி மக்களிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருள்செல்வன் சீனிவாசனை அரிவாளால் தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி உள்ளார்.

இதில் படுகாயமடைந்த முதியவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர் திருவெண்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அருள்செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Response