முஸ்லிம் பெண்களுக்கும் ஜீவனாம்சம் தர வேண்டும் – சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு.

தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் விவாகரத்து தொடர்பான ஒரு வழக்கு நடைபெற்றது. அந்த வழக்கில் இஸ்லாமிய பெண் ஒருவர் தன் கணவரிடமிருந்து விவாகரத்திற்கு பிறகு ஜீவனாம்சம் வேண்டும் என்று கேட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜீவனாம்சம் கொடுக்குமாறு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கணவர் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி விவாகரத்து ஆன பெண்களுக்கு கணவர் கண்டிப்பாக சட்டப்படி ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும். இது இஸ்லாம் மதத்திற்கு மட்டுமின்றி அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும். ஜீவனாம்சம் என்பது பெண்களின் உரிமை. சில கணவர்கள் மனைவி உணர்வுரீதியாகவும் பிற வகையிலும் தங்களை சார்ந்திருப்பதை புரிந்து கொள்ளவில்லை. மேலும் இந்திய குடும்பங்களில் இல்லத்தரசிகளின் பங்கையும், தியாகத்தையும் அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறி கண்டிப்பாக கணவர் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Leave a Response