இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி ஒத்திவைக்கப் போகிறீர்கள்..?

அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரிய, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்க வைக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது, இன்னும் எத்தனை நாட்கள் தான் இப்படி ஒத்திவைக்க கோரிக்கை வைத்துக் கொண்டே இருக்கப் போகிறார்கள் என்பதை பார்க்கத்தான் போகிறோம் என்று, அமலாக்கத்துறையை நோக்கி, செந்தில் பாலாஜி தரப்பு அவசரமா கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

நாளை மறுநாள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த ஜாமின் வழக்கு வெள்ளிக்கிழமை கடைசி வழக்காக விசாரிக்கப்படும் என்பதும் குடிப்பிடத்தக்கது.

Leave a Response