அதிமுகவின் பொதுச் செயலாளர் யார் சசிகலாவா..? எடப்பாடியா..?

பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை, அதாவது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினரை ஒன்றாக இணைக்கும் பணியில் சசிகலா தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், முதற்கட்டமாக தென்காசி மாவட்டத்தில் ஜூலை 16 மற்றும் 21 ஆம் தேதி வரை (மொத்தம் 6 நாள்கள்) சட்டமன்றத் தொகுதி வாரியாக அதிமுக தொண்டர்களை சந்திக்கவுள்ளதாக அவரது தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால், சசிகலா வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் “அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.

Leave a Response