விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை 13ஆம் தேதி நடைபெறுகிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தன.
இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத் தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் ஜூலை 8 இன்று முதல் ஜூலை 10ஆம் தேதி வரையும் பிறகு ஜூலை 13ஆம் தேதி என மொத்தம் நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த நாட்களில் அனைத்து டாஸ்மாக் கடைகள், தனியார் மதுபானக்கூடங்கள் மற்றும் சொகுசு ஹோட்டல்களிலும் மதுபான சப்ளை உள்ளிட்ட எதுவும் இருக்கக் கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
இதனால் மது பிரியர்கள் பக்கத்து மாவட்டங்களுக்கு சென்று மது வாங்கும் நிலைமைக்கு சென்றுள்ளது என்று மது பிரியர்கள் வருத்தமாக கூறினார்கள்.