200 ஆபாச படங்கள்ளா..? – நடிகை பவித்ரா கௌடா சாவின் மர்மம் என்ன..?

கொலை செய்யப்பட்ட ரேணுகா சாமி நடிகை பவித்ரா கவுடாவிற்கு 200க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆபாச வார்த்தைகள் இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பியது தெரியவந்துள்ளது.

ரேணுகா சாமி கொலை வழக்கு கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வழக்கு தொடர்பாக நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா மற்றும் ரசிகர் மன்றத்தினர் கூலிப்படையினர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் நடிகை பவித்ர கவுடா மற்றும் தர்ஷனுக்கு எதிரான வலுவான ஆதாரங்களை சிறப்பு விசாரணை அதிகாரிகள் தொடர்ந்து சேகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொலை செய்யப்பட்ட ரேணுகா சாமி செல்போனை போலீஸ் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நீதிமன்றம் அனுமதியுடன் ரேணுகா சாமி பயன்படுத்திய செல்போன் எண்ணை மற்றொரு சிம்கார்டு வாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Response