கள்ளக்காதலனுடன் கைகோர்த்து மாமியாரை கொன்ற மருமகள்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கலியபெருமாள் வலசை என்ற கிராமத்தில் வசிப்பவர் அலமேலு .இவருடைய மகனுக்கு கடந்த மூன்று வருடத்திற்கு முன்பாக பவித்ரா என்ற பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் பவித்ராவிற்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற 17 வயது கல்லூரி மாணவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்த அலமேலு அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளார். இதனையடுத்து இந்த விஷயம் வெளியே தெரிந்து விடுமோ என்ற பயத்தில் பவித்ரா மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் சேர்ந்து அலமேலுவை கழுத்தை நெரித்து கொன்று தீ வைத்து எரித்துள்ளார்கள். இந்த நிலையில் காவல்துறையினர் அவர்கள் இருவரும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Response